R.Tharaniya / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட எல்ல ஒடிசி ரயில் நானுஓயாவில் தடம் புரண்டுள்ளது.
குறித்த புகையிரதம் ஞாயிற்றுக்கிழமை (05) காலை 8:10 இற்கு நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.
புகையிரதத்தில் பதுளை நோக்கி பயணம் மேற்கொண்டு வருகை தந்த பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்,மேலும் குறித்த ரயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் எல்ல நோக்கி செல்வதற்கு வருகைத் தந்திருந்தனர் தடம்புரண்ட புகையிரதத்தினை தண்டவாளங்களில் அமர்த்தும் வரை சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருக்க நேரிட்டது.
எவ்வாராயினும் மிக விரைவில் புகையிரதம் திருத்தப்பட்டு பயணங்கள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
செ.திவாகரன்



9 hours ago
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Dec 2025
15 Dec 2025