Editorial / 2020 ஜூலை 27 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாய்ப்புகளை வழங்காமல் எவரையும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என, நாடாளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தில், சுயேட்சை குழு 2 இல் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி மா. சிறில்ராஜ் தெரிவித்தார்.
நயபெத்த பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், இளைஞர்கள் அனுபவமில்லாதவர்கள், புதியவர்கள் ஆளுமையற்றவர்கள் , பக்குவமற்றவிதமாக பேசக் கூடியவர்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுகிறது இதையெல்லாம் கண்டுகொள்ள தேவையில்லை. வாய்ப்புகளை வழங்காமல் எவரையும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை என்ற பதிலை அவர்களுக்கு வழங்குங்கள் என்றார்.
மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், சுயநலமாகச் செயற்படும் ஒவ்வொரு அரசியல்வாதியும் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறு தெரிவித்த அவர்,
அதற்கு இதுவே சிறந்த தருணம் என்றும் தெரிவித்தார்.
சாதிகள், மதங்கள் என நாட்டில் சில சக்திகள் மக்களை பிரித்துகொண்டு இருக்கின்றன. அதே சக்திகள் எம்மை கூலி சமூகமாக பிரித்துகொண்டும் இருக்கிறார்கள். பேதங்களை பேசி நம்மை அணுகுவோருக்கு எதிராக வாக்களிப்போம் என, அவர் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago