2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

ஐயப்பன் யாத்திரிகர்களுக்கு விஷேட சலுகை

Sudharshini   / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

இந்தியா, சபரிமலைக்கு செல்லவுள்ள ஐயப்பன் யாத்திரிகர்களுக்கு , இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்படும்  அடையாள அட்டை இன்றி, வீசா பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கான நடவடிக்கைகளை இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இலங்கையில் இருந்து ஐயப்பன் யாத்திரிகர்கள் பலர், சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இவர்கள் வீசா பெற்றுகொள்ள வேண்டுமாயின் இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டையை கட்டாயமாக சமர்;ப்பிக்க வேண்டும். இவ்வருடமும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்நிலையில், தொடர்ச்சியான விடுமுறை காரணமாக தமது வீசா விண்ணப்பத்தில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக ஐயப்பன் யாத்திரிகர்கள், இராஜாங்க கல்வி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். 

இதனை அடுத்து இராஜாங்க கல்வி அமைச்சர், இவ்விடயம் தொடர்பாக  உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்படும் ஐயப்பன் பக்தர்களுக்கான அடையாள அட்டை இன்றி, வீசா பெற்றுகொள்வதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

யாத்திரை குழுக்களுக்கு பொறுப்பாகவுள்ள குருசுவாமிகளின் சிபாரிசுக்கு இணங்க, இந்து கலாசார திணைக்களத்தின் அங்கிகாரம் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச வீசா பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தை சேர்ந்தவர்கள் கண்டியிலும் ஏனையோர் கொழும்பிலும் பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .