2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘ஒன்றிணைந்து முன்னேற உறுதி’

Gavitha   / 2021 ஜனவரி 07 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

2021ஆம் ஆண்டில், நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் சிறப்பு பெற, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு வழங்க உறுதிபூண்டுள்ளனர் என, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், நுவரெலியா பிரதேச சபை, நாட்டில் ஏனைய பிரதேச சபைகளுக்கு முன்னுதாரணமாகச் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியா பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான முதல் சபை அமர்வு, நேற்று (06), சபைத் தவிசாளரின் தலைமையில், நானு-ஓயாவிலுள்ள பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போதே, அனைத்து சபை உறுப்பினர்களும் உறுதிபூண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சபைத்தவிசாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டல், ஆலோசனையின் பேரில், நடப்பு புதிய ஆண்டில், நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக, பிரதே சமக்களுக்கு சிறப்பான அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெருந்தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 486 குடும்பங்களுக்கு, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர்  ஜீவன் குமாரவேல் தொண்டமான் ஊடாக, உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .