2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துடன் ஒருவர் கைது

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடைய கஜமுத்து ஒன்​றை விற்பதற்காக, மாத்தளை பிரதேசத்துக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபருடன் பொலிஸ் அதிகாரிகள் ஒரு வாரமாக கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கலந்துரையாடி வந்த நிலையில், இறுதியில் விலை தீர்மானிக்கப்பட்டு கஜமுத்தை சந்தேகநபர் கொண்டு வந்த போதே, இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அங்குணகொலபெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ள பொலிஸார், மாத்தளை நீதவான் நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X