R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா A7 பிரதான வீதியில் வியாழக்கிழமை (21) அன்று காலை 4 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பகுதியில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த 4 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.
குறித்த வீதியில் தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மோட்டார் வாகன பழுது பார்க்கும் நிலையத்தின் முன்பாகவே இந்த விபத்துக்கள் இடம் பெற்றுள்ளது.
குறித்த நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து எண்ணெய் கசிந்து பிரதான வீதியில் சென்று கொண்டிருந்ததை தொடர்ந்து அவ் வீதி ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் வீதியில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பினர். இவ்விபத்து நிகழ்ந்து சில நிமிடங்களில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் வீதியூடான போக்குவரத்தை பாதுகாப்பாக முன்னெடுத்ததோடு சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் லொறி சாரதியின் அலட்சியப் போக்கினால் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பலரும் தெரிவித்தனர்.
சுஜிதா
31 minute ago
38 minute ago
44 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
44 minute ago
44 minute ago