2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஓல்ட்டன் தொழிலாளர்களுக்காக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள்

Kogilavani   / 2021 மார்ச் 09 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஓல்ட்டன் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்காக, நீதிமன்றில் ஆஜராகுவதற்கு சட்டத்தரணிகள் குழுவொன்று முன்வந்துள்ளது.

மேற்படித் தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மேற்கொண்டுள்ளார் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கண்டி பல்லேகல சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரையும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், சங்கத்தின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி  எம்.உதயகுமார் ஆகியோர், நேற்று  (8) நேரில் சென்று பார்வையிட்டனர். 

அத்துடன், மேற்படி ஒன்பது பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையில் குறித்த இருவரும் ஈடுபட்டுள்ளனர்.

விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள ஓர் ஆண் உட்பட 9 பெண்களும் இன்றைய தினம்  நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தவுள்ளனர். 

இந்நிலையில் இவர்களுக்காக வாதாடுவதற்காக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் முயற்சியில், சட்டத்தரணி மனோரி ரத்னசேகர தலைமையில், கண்டி மேல்நீதிமன்ற சட்டத்தரணிகள் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவினர், நாளை (10) நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

ஒல்ட்டன் தோட்ட நிர்வாகத்துக்கும் தொழிலாளர்ளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து, சுமார் 26 தொழிலாளர்களுக்கு எதிராக, தோட்ட நிர்வாகம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

முறைப்பாட்டுக்கு அமைய இதுவரை  10 பேரை பொலிஸார் கைதுசெய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை, சந்தேக நபர்களை நாளைய (10) தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 16 பேரையும் அன்றைய தினம் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 3 ஆம் திகதி முதல் ஒல்ட்டன் தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளைச் சேர்ந்த சுமார்  600 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் ப.திகாம்பரம் எ.பியின் ஆலோசணைக்கமையை தோட்ட நிர்வாத்துடன் தொழிலாளர் தேசிய குழு, தோட்ட தலைவர்கள் சகிதம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X