Sudharshini / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஊவா மாகாண சபையில் ஏற்படுத்தமப்பட்டிருக்கும் கூட்டாட்சியை,மக்;கள் விரும்பவில்லை என்று தெரிவித்த ஊவா மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.பி. லீலசேன, இம்மாகாண சபை ஆட்சியை மக்கள், எமது கூட்டமைப்பிடமே ஒப்படைத்திருந்தனர். ஆனால், அவ்வாட்சியை ஐக்கிய தேசியக் கட்சி தட்டிப் பறித்ததுக் கொண்டது. இச்செயல்பாடானது மக்கள் ஆணைக்கு எதிரானதாகும் என்றும் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட விவாதம், ஊவா மாகாண சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மக்கள் ஆணைக்கு எதிராகவே, ஊவா மாகாண சபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கொள்ளையிட்டது. இதனை, எமது கட்சியின் தலைமைப் பீடத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து, மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டோம். எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்த்ததையடுத்து, மீண்டும் ஆட்சி எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், தற்போது ஊவா மாகாண சபையின் ஆட்சி கூட்டாட்சி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கூட்டாட்சிக்கும், ஊவா மாகாண மக்கள் ஆணையை வழங்கவில்லை. ஒரு சிலர், ஜனாதிபதியிடம் கெஞ்சி கூத்தாடி, மாகாண அமைச்சர் பதவியொன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊவா மாகாண சபையிலும் கூட்டாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை, ஊவா மாகாண மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026