2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கொடுப்பதை தடுக்க முடியாது: திகாம்பரம்

George   / 2016 ஜனவரி 16 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரமேஷ்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாக மலையக மக்களுக்கு 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிட்டு செயல்படும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் பெற்றுக்கொடுக்கும் உரிமைகளை தடுக்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மாத்திரமே உரிமை உண்டு. வேறு எவருக்கும் உரிமை இல்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் 2016ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், 'மலையக மக்களுக்கு 2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்தாண்டு வேலைத்திட்டம் இந்த நல்லாட்சி அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க ஐந்தாண்டு வேலைத்திட்டமாக முன்னேடுக்கப்படவுள்ளது.

இதில் கல்வி, காணி உரிமை, வீட்டு உரிமை போன்ற அபிவிருத்தி பணிகள் துரித கதியில் முன்னெடுக்கபடவுள்ளன. இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாரான நிலையில் இருக்கின்றார்கள்.

எனவே, தோட்ட தொழிலாளர்கள் எவருடைய பசப்பு பேச்சுகளுக்கும் செவிகொடுக்காது ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை காணும் வழியினை அடைய வேண்டும் என்பதை இத் தை பொங்கல் தினத்தில் சவாலாக கொண்டு செயல்படுவோம்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .