Kogilavani / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நிறைவடைந்துள்ள வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை, மாவட்ட செயலகம் இதுவரை செலுத்தவில்லை என கூறி, ஒப்பந்தக்காரர்களும் அவர்களிடம் தொழில்புரிபவர்களும் நேற்று (06) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஒப்பந்தக்காரர், 'நான் கடந்த பல மாதங்களுக்கு முன்பாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்த வேலைகள் பலவற்றை நிறைவு செய்துள்ளேன். ஆனால், நிறைவு செய்த வேலைகளுக்கு எனக்கு கொடுக்க வேண்டிய பணம் இன்னும் கிடைக்கவில்லை' என்றார்.
இதன் காரணமாக இந்த புதுவருட காலத்தில் என்னிடம் தொழில்புரிகின்ற தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, அவர்கள் இன்று இந்த எதிர்ப்பை இங்கு தெரிவிக்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் என்னிடம் முறையற்ற விதத்தில் பணம் கேட்கின்றார்கள். நான் இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எங்களிடம் 10 முதல் 20 வீதம் வரை பிணை பணமாக பெற்றுக்கொள்ளும் தொகையும் இதுவரையில் மீள செலுத்தப்படவில்லை. நாங்கள் எங்களுடைய தொழிலை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, எங்களுக்கு சாதாரண பதில் ஒன்றை பெற்றுத் தர வேண்டும். அதாவது, எங்களுக்கு சேர வேண்டிய பணம் எங்களிடம் கையளிக்கப்படவேண்டும்' என்றார்.
மேலும் நாங்கள் சட்டவிரோதமாக பணம் வழங்க முடியாது. எமக்கு அந்தளவில் இலாபம் கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி.எலன் மீகஸ்முல்லவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது
'அரசாங்கத்தின் பணத்தை நினைத்தபடி வழங்க முடியாது. செய்து முடிக்கப்பட்டுள்ள வேலைகளில் இன்னும் சில குறைபாடுகள் இருக்கின்றன. எனவே, அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இது மட்டுமல்லாமல் குறித்த ஒப்பந்தக்காரர் இரண்டாம் நிலை ஒப்பந்தக்காரராகவே செயற்படுகின்றார். எங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு செயற்படுகின்றவர்கள் குறித்த வேலைத்திட்டத்தை செய்கின்ற பகுதிகளில் உள்ள பொது அமைப்புகளாகும்.
அந்த அமைப்புகள் ஊடாகவே குறித்த ஒப்பந்தக்காரர் வேலைத்திட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். எனவே அவர் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாகவும் நான் கவனம் செலுத்தவுள்ளேன். அவர் எங்களுடைய அதிகாரிகள் தொடர்பாகவும் குறைகளை கூறியுள்ளார். அது தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்துவோம்' என்றார்.
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026