Kogilavani / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
நித்திரையில் இருந்த தனது சகோதரனை கோடரியால் வெட்டி கொலை செய்த 44 வயதுடைய சகோதரியை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று பண்டாரவளை, பட்டியகெதர பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், பட்டியகெதரவைச் சேர்ந்த டி.பி.ஜெயசிங்க (வயது 58) என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். சம்பவத்தில், அவரது சகோதரியான டி.பி.அனுஷா என்ற பெண்ணே பண்டாரவளை பொலிஸாரால் கைதாகியுள்ளார்.
கைதான பெண் கொலையுண்டவரின் சகோதரி எனவும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கோபத்தில் தனது சகோதரனை வெட்டி கொலை செய்ததாக அப்பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago