2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காதைப் பதம் பார்த்த பிரதிஅதிபருக்கு எதிராக முறைப்பாடு

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவனின் முடியைக் கத்தரிக்க முற்றப்பட்ட பிரதிஅதிபர் ஒருவர், மாணவனின் காதை துண்டித்த சம்பவமொன்று, மஹியங்கனை, ரிதிமாலியத்தில் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனை, ரிதிமாலியத்த பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், தரம் 11இல் கல்வி பயிலும் மாணவனின் காதை, அதே பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றுபவரே, இவ்வாறு வெட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை, ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவனுக்கு, அளவுக்கு அதிகமாக வளர்ந்திருந்த முடியை வெட்டுவதற்காக, பிரதிஅதிபரும் இரு ஆசிரியர்களும், பலவந்தமாக மாணவனைப் பிடித்து, முடியை வெட்ட முற்பட்டபோது, மாணவனின் காதும் வெட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலையினுள் சிகிச்சை வழங்கிய பாடசாலை ஆசிரியர்கள், அவரை முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மாணவனின் தந்தை, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .