Gavitha / 2016 ஜூன் 25 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
கிராம சேவையாளரின் கழுத்தில் வாளொன்றை வைத்து, கொலை அச்சுறுத்தல் விடுத்த மர அறுவையாளர் ஒருவரை, ஊவா - பரணகமை பொலிஸார், நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்துள்ளனர்.
அரச காணியொன்றில், சட்டவிரோதமாக மரம் வெட்டுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, பிரதேச செயலாளரின் அனுமதியுடன், குறிப்பிட்ட இடத்துக்கு, அப்பகுதி கிராம சேவையாளர் விரைந்துள்ளார்.
அங்குச் சென்ற கிராம சேவையாளரை, சட்டவிரோதமாக மர அறுவையில் ஈடுபட்டிருந்த நபர், கிராம சேவையாளரின் கழுத்தில் வாளை வைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
தான் இது விடயத்தில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்போவதில்லையென்று கூறி, அங்கிருந்த தப்பி வந்த கிராம சேவையாளர், ஊவா - பரணகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர், சந்தேக நபரை கைது செய்த பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago