Sudharshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை, ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திக்வெல்லை பெருந்தோட்டத்தில் கடமைபுரியும் கிராமசேவகரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் அவரை தாக்க முற்பட்ட நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர், சட்ட விரோதமாக அரச காணியொன்றில் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு, தடைவிதிக்கும் வகையில் வழங்கப்பட்ட ஹாலிஎல பிரதேச செயலாளரின் உத்தியோகப்பூர்வ கடிதத்தை, மேற்படி கிராம சேவகர் சம்பந்தப்பட்ட நபரிடம் கையளிக்கச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிராமசேவகர் கையளித்த கடிதத்தை அந்நபர் தூக்கி எறிந்துள்ளதுடன், அவரை ஏசி தாக்க முற்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கிராமசேவகர், தமக்கேற்பட்ட நிலையை பிரதேச செயலாளருக்கு அறிவித்ததுடன் செவ்வாய்க்கிழமை(2) பதுளை பொலிஸிலும் முறையிட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபர், தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
22 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
13 Apr 2026