Kogilavani / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
'மூலவளங்களின் உச்ச பயன்பாட்டின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, கொட்டகலை மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேசங்களில் கால்நடை துறையில் அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச பால் பண்ணையாளர்களை உள்ளடக்கி சங்கமொன்றை அங்குரார்பணம் செய்யவிருப்பதாக இந்திய வம்சாவளி மக்கள் முன்னனியின் பிரதி தலைவர் சு.ப.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கொட்டகலையில் நேற்று புதன்கிழமை (03) பால்பண்ணையாளர்கள் சங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பண்ணையாளர்களை சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளை வளர்க்க கூடிய அதிகமான வளங்கள் காணப்படுகின்றது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை மற்றும் தனியார் பால் உற்பத்தியாளர்கள் ஊடாக கிடைக்கப்பெறும் உச்ச கட்ட பலன்கள், கடந்த சில வருடங்களாக கால்நடை வளர்ப்பாளர்களை சென்றடையவில்லை' என்றார்.
'தேசிய கால்நடை அபிவிருத்தி சபை அரச விவசாய கூட்டுதாபன சட்டத்தின் கீழ் 1973ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் வெளிக்கள நடவடிக்கைகள் 1974ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் மலையக மக்கள் உள்ளிட்ட நாட்டில் அனைத்துப் பிரதேச மக்களும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த கால்நடை உற்பத்தி மற்றும் பால் உற்பத்தி அமைப்புகள் ஊடாக செயற்பட்டது. தோட்டத் தேயிலை தொழிலை மாத்திரம் நம்பியிருக்கும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு சுயதொழிலாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டனர்.
இருந்தும் கடந்த காலங்களில் கால்நடை வளர்ப்பு அருகி வருகின்றது. இந்த நிலையில் தோட்டப் பகுதிகள் மற்றும் பெருந்தோட்ட கிராமப்பகுதிகளில் பால் உற்பத்தி மிகவும் குறைவடைந்து வருகின்றது' என்றார்.
'இது தொடர்பில் அம்பகமுவ பிரதேச மற்றும் நுவரெலியா பிரதேசத்தில் பால் பண்ணையாளர்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க சங்கம் ஒன்று இல்லாததன் காரணமாகவே தனிமனித போராட்டத்துக்கு தாம் ஆளாகிவருவதாக பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
'ஆகவே, பிரதேச பண்ணையாளர்ளுக்காக விரைவில் சங்கம் ஒன்றை அங்குராப்பணம் செய்யப்போவதாகவும் அவ்வாறு ஆரம்பிக்கப்படும் சங்கத்தின் ஊடாக கால்நடை வளர்க்க கூடிய பயிற்சிகள் வளங்களை பாதுகாக்க கூடிய வழிமுறைகள் பால் உற்பத்தியை, பெருக்க கூடிய நவீன வேலைத்திட்டங்கள் புதிய தொழில்நுட்ப முறைகள், ஊக்குவிப்புகள், கால் நடை வளர்ப்பதில் ஆர்வத்தினை தூண்டி சுயதொழிலை மேற்கொள்ளும் அளவிலான பயிற்சிகள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றை நடாத்த அரசாங்க மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்கென கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் மற்றும் கால்நடைவள அமைச்சு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் உதவிகளை பெருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன' என அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
30 minute ago