2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கேள்விப்பத்திரம் வழங்குவதில் தாமதம்: பொலிஸில் மாணவர் முறைப்பாடு

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

நாடளாவிய ரீதியில், கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், தொழில்நுட்ப பாடப்பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு, இரண்டு மணித்தியாலங்கள்; தாமதித்து, கேள்விப் பத்திரம் வழங்கியச் சம்பவமொன்று கண்டி, வலல மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தினால் பாதிப்படைந்த 11 மாணவர்களும் வத்துகாமம் பொலிஸில் சனிக்கிழமை (06) முறைப்பாடு செய்துள்ளனர். க.பொ.த உயர்தர பிரிவில் தொழில்நுட்ப பாடத்துக்கு தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை, சனிக்கிழமை (6) நடைபெற்றுள்ளது. மேற்படி நிலையத்தில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடத்தின் முதல் பகுதிக்கான கேள்விப்பத்திரம் உரிய நேரத்துக்கு வழங்கப்பட்டுள்ளப் போதிலும் இரண்டாம் பகுதிக்கான கேள்விப்பத்திரம் இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்தே வழங்கப்பட்டுள்ளன.

கேள்விப்பத்திரம் தாமதமாக வழங்கப்பட்டதனால்,  விடையளிப்பதற்கு மேலதிகமாக 15 நிமிடங்கள்  வழங்கப்பட்டுள்ளப் போதிலும் அக்காலம் தமக்கு விடையளிப்பதற்கு போதுமானதல்ல என்றுக் கூறி இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11  மாணவர்களும் வத்துகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .