2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

குளவிக் கொட்டு: 23 பேர் பாதிப்பு

Sudharshini   / 2016 ஜூலை 25 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

பொகவந்தலாவை, கெம்பியன் மற்றும் கெக்கஸ்வோல்ட் தோட்டங்களில்  இன்று திங்கட்கிழமை காலை பணிப்புரிந்துகொண்டிருந்த 22 பேர், குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை கெம்பியன் தோட்டத்தில் குளவி (கதண்டு)  கொட்டுக்குள்ளான  16  பெண் தொழிலாளர்களில் ஒருவர் பொகவந்தலாவை வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 15 பேர் கெம்பியன் தோட்ட வைத்தியசலையில்  அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, கெக்கஸ்வோல்ட தோட்டத்தில் குளவிக் கொட்டுக்குள்ளான  6 தொழிலாளர்கள் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்; இவர்களில் மூவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .