Sudharshini / 2016 ஜனவரி 17 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மாத்தளை, வரக்காமுற பிரதேசத்தில் நேற்று இரவு (16) இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், எட்டுப் பேர் படுகாயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கண்டி வீதியில் அமைந்துள்ள வரக்காமுற பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றிக்கு வந்த குழுவொன்று சிகரட் கேட்டுள்ளனர். இதன்போது சிகரட் இல்லை என வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்ததையடுத்து இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது.
இதில் இரு தரப்பினரையும் சேர்ந்த எட்டுப் பேர் காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மாத்தளை பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago