Kogilavani / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இலங்கையின் பிரதான ஆறுகளுக்கு அருகிலிருந்து மதுபானம் அருந்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று, சுற்றுச்சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுபானப் பிரியர்கள், மதுபானங்களை அருந்துவிட்டு மதுபான போத்தல்களை கங்கைளில் வீசிச் செல்வதால், கங்கைகள் அசுத்தமடைந்து வருவதாக சுற்றுச் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலித்தீன் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்திக் போத்தல்கள், கண்ணாடி போத்தல்கள் என்பன ஆறுகளில் வீசி எறிந்துவிட்டுச் செல்லப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
குறிப்பாக கொழும்பு - பதுளை வீதியை அண்மித்து அமைந்துள்ள வேகங்கையில் மதுபானபோத்தல் கழிவுகள் அதிகரித்துக் காணப்படுவதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதேச மக்கள், இந்த ஆற்றுநீரை பல்வேறுத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றர் என்றும் எனினும் மதுபான பிரியர்கள், சுற்றுலா பயணிகளால் ஆற்றுநீர் அசுத்தப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மதுபானபோத்தல்களை வீசி எறிந்துவிட்டச் செல்வதால், ஆறுகளில் இறங்குபவர்கள் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இரவு நேரங்களில், மலசலகூட கழிவுகள் ஆற்றுநீரில் கலந்துவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே கங்ககைளின் புனிதத்தைத் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.
அத்துடன், பிரதான ஆறுகளுக்கு அருகிலிருந்து மதுபானம் அருந்துவதைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சுற்றுச் சூழலியலாளர்கள், மதுபானம் அருந்த வேணடாம் என்று அறிவுறுத்தும் வகையிலான பதாதைகளையும் கரையோரங்களில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026