Kogilavani / 2016 ஜூன் 19 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் பெருபாலான தோட்டங்களில் கசிப்பு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால், பாடசாலை மாணவர் முதல் பல தரப்பினரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேற்படி மாவட்டத்திலுள்ள பெருபாலான தோட்டங்களில், கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கசிப்பு மற்றும் கள்ளச் சாராயம் என்பவற்றை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தலையிட்டு முற்றாக ஒழித்தனர். ஆனால், தற்போது அத்தோட்டங்களில் கசிப்பு விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதன் காரணமாக குடும்பப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்படி தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கசிப்பு விற்பனை மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதற்கு எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago