2025 மே 15, வியாழக்கிழமை

கஜமுத்து விவகாரம்: மூவர் நீதிமன்றின் முக்கியஸ்தர்

Editorial   / 2023 மார்ச் 26 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனப் பிரஜையான வர்த்தகர் ஒருவருக்கு ஐந்து கஜமுத்துக்களை விற்பனைச் செய்ய முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளையில் உள்ள பிரபல்யமான ஹோட்டல் ஒன்றில் வைத்தே, இந்த வர்த்தகத்துக்கான பேச்சு இடம்பெற்றவிருந்தது.. ஐந்து கஜமுத்துக்களும் 120 இலட்சம் ரூபாய்க்கு விற்பனைச் செய்வதற்கு விலை குறிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர், மாத்தளை நீதவான் நீதிமன்றத்தின்  பணியாளர்கள் ஆவர். அதிலொருவர்  நீதிமன்றத்தின் காப்பகத்தில் பணியாற்றுகின்றார். மற்றுமொருவர் வழக்கு பொருட்கள் அறையின் பணியாளர்கள் இன்னுமொருவர் இரத்தோட்டை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.  

மாத்தளை நீதவான் நீதிமன்ற வழக்குப் பொருட்கள் அறையில் இருந்ததாகக் கூறப்படும் இந்த ஐந்து கஜமுத்துக்கள், அவர்கள் வருகைதந்த ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் பொலிஸ் பொறுப்பின் கீழ் ​கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட படையணியின் தம்புள்ளை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு தேடுதலை மாத்தளை பிரிவு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள், மாத்தளையில் உள்ள பிரபல்யமான ஹோட்டலில்   மேற்கொண்டு அவர்களை கைது செய்துள்ளனர்.

ஐந்து கஜமுத்துக்கள் 120 இலட்சம் ரூபாய்க்கு சீனப் பிரஜைக்கு விற்பனைச் செய்வதற்கு தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன்னரே பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சீனப் பிரஜையின் தரகர் வேடத்தில் அந்த ஹோட்டலின் அறையில் தங்கியிருந்த பொலிஸ் விசேட படையணியின் அதிகாரிகள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .