2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

Kogilavani   / 2017 மே 16 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரவிந்திர விராஜ் அபயசிறி

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், மாத்தளை, கொடுவேகெதர மற்றும் எம்.சிபொர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21,19 வயதுடைய இளைஞர்கள் இருவரை, மாத்தளை பொலிஸா, திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து, 2 கிராம் 320 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மாத்தளை, கொடுவேகெதர பாடசாலைக்கு அருகில், கஞ்சாவுடன் நடமாடித் திரிந்த இளைஞனை முதலில் கைதுசெய்த பொலிஸார், அவ் இளைஞனிடமிருந்து 1 கிராம் 480 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி இளைஞன் வழங்கியத் தகவலுக்கு அமைய மற்றைய இளைஞனையும் கைதுசெய்த பொலிஸார் அவ்விளைஞனிடமிருந்து, 840 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

இவ்விருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .