2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் மலைக்கு சென்ற அறுவருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

கஞ்சாவுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக வந்த 06 இளைஞர்களையும், நாளை 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.கருணாகரன் உத்தரவிட்டார்.

மேற்படி 06  இளைஞர்களும் நுகேகொடை, தெமிமுல்லை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள்  18 ற்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

கினிகத்தேனை நகரில் சனிக்கிழமை (06) காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மேற்படி அறுவரும் பயணித்த வாகனத்தை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போதே இவர்களிடம்  கஞ்சா இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறுவரையும் கைதுசெய்த கினிகத்தேனை பொலிஸார், விசாரணைகளின் பின்னர்,  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .