Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 06 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சதிஸ்
மழை காரணமாக பொகவந்தலாவை, செப்பல்ட்டன் தோட்டத்திலுள்ள மாணிக்கக்கல் சுரங்க அகழ்வு குழிக்குள் வெள்ள நீர் புகுந்ததால் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பொகவந்தலாவ செப்பல்ட்டன் தோட்டத்தில் மாணிக்கக்கல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் 72 சுரங்க குழிகள் காணப்படுவதுடன் 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் நீடித்து வரும் சீரற்ற காலநிலைக் காரணமாக 72 குழிகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்ததால் நீர் இரைக்கும் இயந்திரம் மற்றும் உபகரணங்கள் நீரில் அல்லுண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதன்காரணமாக மேற்படி தொழிலாளர்களின் ஜுவனோபயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
1 hours ago