2025 மே 17, சனிக்கிழமை

கடத்தப்பட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி வைத்தியசாலைக்கு அருகாமையில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு  வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

 ஹந்தானை பகுதியிலுள்ள  பாழடைந்த  இடமொன்றில் வைத்து இளைஞர் மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும்  அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திறமையான குத்துச்சண்டை வீரர் என்ற விருதை பெற்ற இந்த இளைஞனை, கண்டி- வைத்தியசாலை லேனில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிலரால் ஓட்டோவொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .