Kogilavani / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
கிராமப்புறங்களில் தற்போது நடைமுறையில் உள்ள கடன் அடிப்படையிலான வீடமைப்புத் திட்டம், பெருந்தோட்ட பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கு அமைவாக, இராகலை, ஹய்பொரஸ்ட், வெலிஒயா, மட்டுக்கலை, அல்மா, மதுரட்ட, கோணபிட்டிய ஆகிய பகுதிகளில் 474 வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், பெருந்தோட்ட கம்பனிகளின் முகாமையாளர்கள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள் ஆகியோருக்கு இடையிலான கூட்டமொன்று, நுவரெலியா மாவட்ட செயலகத்திலுள்ள இராஜாங்க கல்வி அமைச்சின் கிளைக் காரியாலயத்தில் நேற்று(19) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இராதாகிருஷ்ணன் இதனைக் கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,
'கிராமப்புற பகுதி மக்களுக்கு, வீடமைப்பு அமைச்சின் மூலமாக கடன் உதவு பெற்றுக்கொடுக்கப்பட்டு வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, அந்தத் திட்டத்தை பெருந்தோட்ட பகுதி மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டேன். அதற்கு அவர் தயாராக உள்ளதாக என்னிடம் கூறினார்.
நான் உடனடியாக எனது இணைப்பாளர் கனகராஜின்; கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு அமைய, மேற்படி திட்டத்தின் முன்னேற்பாடுகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை நிறைவுசெய்து உடனடியாக வீடமைப்புக்கான அடிக்கல்லை நாட்ட வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள தோட்ட முகாமையாளர்களிடம் கோருகின்றேன்' என்றார்.
'இந்தத் திட்டம் முழுமையாகக் கடன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதாவது, மூன்று இலட்சம் ரூபாய் கடன் தொகையாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சு மூலம் ஆறுவீத வட்டிக்கு, 10 வருடங்களுக்கு மாதாந்தம் 3,330 ரூபாய் வீதம் செலுத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் ஊடாக அனைவருக்கும் இலவசமாக வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கு நியாயமான ஒரு காலம் தேவைப்படும். எனவே, வீடமைப்பு திட்டத்தை விரைவுபடுத்தவே இதனை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்' என அவர் அங்கு மேலும் கூறினார்.
இவ்வீடுகளுக்கான காணிகளை தோட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, கோணப்பிட்டிய (20வீடுகள்), கீனாகலை (15 வீடுகள்) உடபுஸ்ஸல்லாவ (30 வீடுகள்) ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த வீடமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இவ்வீடுகளை மிக விரைவில் பயனாளிகளுக்கு கையளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
40 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
4 hours ago