2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கட்டுப்பாட்டு விலையை மீறியதால் ஒலி பெருக்கியில் அறிவிப்பு

ஆ.ரமேஸ்   / 2020 மே 13 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கந்தப்பளை, இரகாலை, நுவரெலியா, நானு-ஓயா ஆகிய பிரதேசங்களின் விவசாயிகளுக்கு, கட்டுப்பாட்டு விலையை மீறி உர விற்பனை  செய்யப்பட்டு வருவதாக, சிறு தோட்ட விவசாயிகள், விவசாய திணைக்களத்துக்கும் நுகர்வோர் அதிகார சபைக்கும் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையில், இதைக் கருத்தில் கொண்டு, அவ்வாறு கட்டுப்பட்டு விலையையும் மீறி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அதற்கு முன்னதாக, கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்து, குறித்த நகரங்களில் ஒலிபொருக்கி மூலம் கடந்த இரண்டு நாள்களாக அறிவித்து வருகின்றனர்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த போதிலும், விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, உரக் கடைகளைத் திறந்து, கட்டுப்பாட்டு விலையில் உரங்களை விற்பனை செய்யுமாறு, அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.

உரங்களை விநியோகம் செய்யும் கம்பனிகள் ஊடாகவே இந்த விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நகரங்களில் உள்ள உர விற்பனையாளர்கள், உரத்தட்டுப்பாடு காணப்படுவதாக பொய்கூறி, இவ்வாறு அதிக விலையில் உரங்களை விற்பனை செய்வதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, உரங்களைப் பதுக்கி வைத்தாலோ, கட்டுப்பாட்டு விலையை மீறி உரங்களை விற்பனை செய்தாலோ, அவ்வாறான வரத்தகர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிப் பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .