Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நுவரெலியா மாவட்டத்தில், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, நாடாளுமன்றம், உள்ளூராட்சி மன்றம், மாகாண சபை ஆகியவற்றுக்கு, மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படும் மக்கள் பிரதிநிதிகளால், கணிசமான அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
டயகம நகரத்திலிருந்து போடைஸ் ஊடாக ஹட்டன் செல்லும் 24 கிலோமீற்றரைக் கொண்ட வீதி, 2005ஆம் ஆண்டு செப்பனிடப்பட்டு, மக்கள் பாவனைக்காக பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்றும் எனினும், தற்போது இந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதியின் பல இடங்களில் வெடிப்புகள் காணப்படுவதாகவும் இந்த வீதிகளில் அதிக விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 minute ago
17 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
29 minute ago