Kogilavani / 2021 மார்ச் 08 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
கண்டி மாவட்டத்தில், காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள அனைத்து மக்களுக்கும் விரைவில் தீர்வை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று (7) நடைபெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று, காணி உறுதிப்பத்திரம் இல்லாத மக்களை இனங்கண்டு அவர்களுக்கு காணி உறுதியைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நான்கு மாதங்களுக்குள் 4000ம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மஞ்சள், இஞ்சி போன்ற 16 வகையான பயிர்ச்செய்கைகளை நமது நாட்டில் உற்பத்திச் செய்வதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதுடன் அதனோடு இணைந்ததாக விவசாயத்தையும் ஊக்குவிக்கவுள்ளார்.
எனவே ஜனாதிபதியின் திட்டங்களை செயற்படுத்துவதில், விசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்குப் பாரிய பொறுப்புகள் உள்ளன என்று மேலும் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026