2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்த யுவதிக்கு கொரோனா

Kogilavani   / 2021 மார்ச் 09 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கண்டி தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த 19 வயது யுவதி, கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளார் என்று, மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களம் நேற்று (9) தெரிவித்தது.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் மேற்படி யுவதி மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் நேற்று (9) வெளியான நிலையிலேயே, அவர் கொரோனா மரணமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

நிமோனியா, ஆஸ்துமா, அதிக சிறுநீர் வெளியேறல் காரணமாகவே மேற்படி யுவதி மரணமடைந்துள்ளார் என்று வைத்தியபரிசோதனையில் தெரியவந்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X