2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கண்டியில் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

பேராதனை உத்ஹித பூங்காவுக்கு முன்பாக வர்த்தகம் நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற ஒருவரை இரண்டு நாட்களாக காணவில்லை என காணாமல் போனவரின் மனைவியால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

47 வயதான குறித்த நபர், கண்டி பிரதேசத்தின் அரசியல்வாதியான மஹிந்தானந்த அளுத்கமகேயின் தீவிர ஆதரவாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு கொலை வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இவர் காணாமல் போயிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X