Kogilavani / 2021 மார்ச் 23 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோனா தோட்டத்தில், இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பைப் பேணிய 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எல்.பி.ஜி.அமில தெரிவித்தார்.
குறித்த இளைஞர் கொழும்புக்கு சென்று வந்துள்ளார் என்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வைத்திய சிகிச்சைக்காக சென்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் கந்தப்பளை மற்றும் நுவரெலியா ஆகிய இடங்களில் இரண்டு திருமண வைபவங்களிலும் கலந்துகொண்டுள்ளார் என்றும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை சட்டவிதிகளை மீறி செயற்பட்டுள்ளார் என்றும் பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
தொற்றுக்கு உள்ளான இளைஞர் பொகவந்தலாவை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொதுசுகாதார பரிசோதகர், இளைஞரின் தாய் கந்தப்பளை பாடசாலை ஒன்றின் ஆசிரியர் எனவும் தற்போது இவரின் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026