Kogilavani / 2021 மார்ச் 09 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கினிகத்தேனை – நாவலப்பிட்டி பிரதான வீதி, பகதுலுவ பகுதியில், இன்று (9) முற்பகல், கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்த நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையிலிருந்து கம்பளை நோக்கி, கொங்கிரீட் தூண்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றே, இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஒருவர் ஆகியோரே காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீடிரென ஏற்பட்ட இயந்திரக் கோளாரே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்த பொலிஸார், குறித்த பகுதியில் ஒரு வழிப் போக்குவரத்து இடம்பெற்று வருவதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.



21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026