Kogilavani / 2021 மார்ச் 16 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழமை என்ற பதத்தை கம்பனிகள் மறந்துவிட்டனர்
வழமை சட்டம் இன்னும் அமுலில் உள்ளது
ஆ.ரமேஸ்
தோட்டக் கம்பனிகளோ அல்லது முதலாளிமார் சம்மேளனமோ, தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து செக்ரோல் மூலம் சந்தா அறவிடுவதை நிறுத்த முடியாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ள முன்னாள் சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, நீதித்துறை பிரதியமைச்சர் வ.புத்திரசிகாமனி, பெருந்தோட்டங்களில் நடைமுறையிலுள்ள 'வழமை' என்ற பதத்தை கம்பனிகள் மறந்துச் செயற்படுகின்றன என்றும் சாடினார்.
தோட்ட நிர்வாகங்கள் கூட்டுஒப்பந்தத்தில் இருந்து விலகியதாகவும் இதுவரை காலமும் அறிவிட்டு வந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க உறுப்பினர் சந்தாவை, இனிமேல் பிடித்துத் தரமுடியாது என்றும் தோட்டக் கம்பனிகள் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சந்தா அறவிடுவது தொடர்பாக, 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இலங்கை தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் செய்துக்கொண்ட தொழில் வழங்கள் மற்றும் ஊதியம் ஆகிய இரண்டு முக்கிய ஒப்பத்தங்களுடனான 11 அம்ச உடன்படிக்கையில், சந்தா அறவிடுவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.
தோட்டங்களில் 'வழமை' (CUSTOM) என்ற பதமொன்று உள்ளதென்றும் இன்றும் இப்பதம், ஒப்பந்த சட்டமாக வழமையில் உள்ளது என்றும் தெரிவித்தார். நினைவூட்டினார்.
வழமைச் சட்டத்துக்கு அமைவாக, தொழிலாளர்கள் தொழில் விடயங்களில் அனுபவித்து வந்த எந்தச் சலுகையையுமே இன்றைய நிர்வாகங்கள் இரத்துச்செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் 1992ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னரான காலங்களில் செய்துகொள்ளப்பட்ட கூட்டுஒப்பந்தங்களால் ஏற்கெனவே ஒத்துக்கொள்ளப்பட்ட வழமை விடயங்களை உள்ளடக்கியே, ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் எனவே, இந்த வழமையை கம்பனிகளால் மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன, தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 நாட்கள் தொழில் என்ற கட்டாய சட்டத்தைக் கொண்டுவந்தார் என்றும் இதன்போதான ஒப்பந்தத்தில், இ.தொ.கா, இ.தே.தோ.தொ.சங்கம் என்பன கைச்சாத்திட்டுள்ளன என்றும் இதுவும் வழமை என்ற சட்டத்தில் இன்றும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 1992 ஆம் ஆண்டு, பெருந்தோட்டங்களைக் கம்பனிகள் பொறுப்பேற்கும்போது மேற்குறித்த சட்டங்களில் தொழிலாளர்கள் நலன்சார்ந்த அம்சங்கள் கொண்ட விடயங்களுடனேயே தோட்டங்களை பொறுப்பேற்றனர் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் வழமை என்ற சட்டத்தில் உள்வாங்கப்பட்ட சலுகைகளை, கம்பனிகள் நடைமுறைப்படுத்தத் தவறியே வருவதாகவும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமை விடயங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அத்துடன் இப்போதுள்ள வழமை என்ற கூட்டுஒப்பந்தத்திலிருந்து கம்பனிகள் விலகிச் செல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.
'கூட்டுஒப்பந்தம் என்பது சட்டம். தொழிற்சங்கம், பெருந்தோட்டக் கம்பனிகள் ஆகிய இருதரப்பும் எடுக்கும் முடிவை, தொழில் அமைச்சர் முன்னிலையில் கைச்சாத்திடும்போது, தொழில் அமைச்சு அரச தரப்பாக ஒப்பந்தத்தை ஏற்று வர்த்தமானி இடுவதால், இது சட்டமாக்கப்படுகிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
'அத்துடன் தொழிலாளர்களின் உழைப்பில் ஒரு தொகையை சந்தாவாக, தோட்ட நிர்வாகம் அறவிட்டு வழங்குவது வழமை சட்டத்தில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இதை நிர்வாகம் மீறவோ மறுக்கவோ முடியாது. இப்போது சந்தாவை பிடிக்கமுடியாது வழங்கமுடியாது என்று சொல்வதெல்லாம் கேளிக்கூத்தாகும்.
'ஆக தொழிலாளர்கள் ஆரம்பகாலம் முதல் அனுபவித்த சலுகைகளை மாற்றியமைத்து, அதிகரிக்க முடியுமே தவிர குறைக்க முடியாது' என்றும் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026