Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன்
கல்வி கற்பதற்கு, வரையறைகள் இல்லை என்பதால், மாணவர்கள், தொடர்ச்சியாக கற்றல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்தில், 2016ஆம் ஆண்டு, க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில், 6 ஏ தர சித்திகளுக்கு மேல் பெற்ற மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு, நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஆச்சரிய மண்டபத்தில், இன்று (30) இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் , சிறப்பு அதிதியாக ஆர்.இராஜாராம் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மாணவர்கள், பரீட்சையில் திறமையாக சித்தி பெறுவதற்கு, தொடர்ச்சியான கற்றலும் அர்ப்பணிப்பும் மனவுறுதியும் இன்றியமையாததாகும். சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள், உயர்தரம் கற்கின்ற போதும், தாம் தேர்ந்தெடுத்த பாடத்துறையில், மிகுந்த கரிசனையுடன் கற்க வேண்டும். அப்போது தான், பல்கலைக்கழகக் கல்வியையும் பெற்றுக் கொள்ள முடியும்.
“தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தருக்கு கற்றனைத்தூறும் அறிவு என்று வள்ளுவர் கூறியுள்ளார். கிடைத்த அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளாவிட்டால், எமது அறிவு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். அதனால், தொடர்ச்சியான கற்றல் என்பது, கல்வியறிவுக்கு இன்றியமையாததாகும். இதை, இன்றைய மாணவர் சமூகம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .