2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கல்வி இராஜாங்க அமைச்சருக்கு எதிர்ப்பு

Kogilavani   / 2017 மே 14 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி இராஜாங்க அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தியப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இலங்கையில் நியமனம் வழங்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல கட்சிகள் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனுக்கு எதிராகவே, இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மலையகப் பாடசாலைகளில் நிலவிவரும் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, இந்தியாவிலிருந்து 100 பட்டதாரி ஆசிரியர்களை வரவழைக்கவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், அண்மையில் அறிவித்தலொன்றை விடுத்திருந்தார்.

இவ்வறிவித்தலுக்கு எதிராகவே, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளதாவது,

“இலங்கையில் 15 ஆயிரம் பாட்டதாரிகள், வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஆனால், இந்தியாவிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களை வரவழைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுமாயின், நாடு எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

நாட்டின் ஏனையப் பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை, தோட்டப்புற பாடசாலை மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கூறப்படும் கருத்துக்கு, நான் உடன்படுகிறேன். ஆனால், தோட்டப்புற பாடசாலைகளில் கடமையாற்றுவதற்காக, இந்தியாவிலிருந்து பட்டதாரிகளை வரவழைப்பது இதற்குத் தீர்வாகாது” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .