2025 மே 01, வியாழக்கிழமை

கல்வி நிலையங்களுக்கு இரண்டு நாள்கள் தடை

Gavitha   / 2021 மார்ச் 10 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிபிட்டிய பொலிஸ் அதிகார பிரதேசத்தில், அறநெறி, முன்பள்ளிப் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவதற்கு, இரண்டு வாரங்களுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய கொரோனா கட்டுப்பாட்டுப் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய பிரதேச தனியார் பா டசாலையொன்றில், 8 மாணவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, எம்பிலிப்பிட்டிய பிரதேசசபைத் தலைவர் சுரன்த வீரசிங்க தெரிவித்தார்.

இத்தீர்மானத்துக்கமைய, எம்பிலிப்பிட்டிய நகர, பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில், கொரோனா கட்டுப்படுத்தும் விதிமுறைகளைப் பேணுமாறும் பொது மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை, சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரையைப் பெற்று நடத்துமாறும், பிரதேச மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .