Kogilavani / 2021 மார்ச் 29 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கங்கைளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் களுகங்கையின் இரு மருங்கிலும் மரக்கன்றுகளை நடும் பணிகள், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பக்கட்டமாக இரத்தினபுரி புனித சமன் தேவாலயத்துக்கு அ ருகில் இருந்து இப்பணி ; ஆரம்பிக்கப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து களுத்துறை மாவட்டம் வரை 193 கிலோமீற்றர் நீளம் வரை வியாபித்துள்ள களுகங்கை 2,784 சதுர மைல் பரப்பளவை கொண்டதாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தின் சிவனொளிபாத மலையடிவார நீர் ஊற்றுக்களில் இருந்தும் இம்மாவட்டத்தின் கிளை ஆறுகளிலிருந்தும் உருவாகும் இலங்கையின் 4 பிரதான ஆறுகளில் ஒன்றான களுகங்கையின் நீரை குடிநீராகவும் ஏனைய தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் இலட்சக்கணக்கான மக்களின் நலன் கருதி இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் முதிரை மரக்கன்றுகள் உட்பட பெறுமதியான மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
மரக்கன்றுகளை நடும் நிகழ்வில், இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவல, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago