Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித்த ஆரியவங்ச
ஊவா மாகாண சபையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள், திண்மக்கழிவு முகாமைத்துவ ஆய்வுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தலைமையில், இவர்கள் தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் அலுவலகத்தில், நேற்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
ஊவா மாகாண சபையின் கீழ் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் 21 பேரும், குப்பைகளை அகற்றும் வண்டிகளின் சாரதிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர், குறித்த சுற்றுலாவில் பங்கேற்கவுள்ளனர், என்று, ஊவா மாகாண அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வல தெரிவித்தார்.
ஊவா மாகாண சபையின் கீழுள்ள 28 நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில், தெரிவு செய்யப்பட்ட ஊழியர்களே, இவ்வாறு அழைத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago