2025 மே 17, சனிக்கிழமை

காசல்றீ நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

காணாமல் போயிருந்த பெண்ணொருவர், காசல்றி நீர்த்தேக்க பகுதியிலிருந்து இன்று (13) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா- காபெக்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆறுமுகம் கமலம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்த்தேக்கத்திலிருந்து 300 மீற்றர் தொலைவிலேயே பெண்ணின் வீடு காணப்படுவதாகவும், நேற்று (12) இரவிலிருந்து   இப்பெண் காணாமல் போயிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன பெண் உறவினர்களால் தேடப்பட்ட போது,  இன்று  காலை 7.30 மணியளவில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .