2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காட்டு யானைகளின் அச்சுறுத்தலால் 5,000 குடும்பங்கள் நிர்க்கதி

Kogilavani   / 2021 மார்ச் 03 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிப்பிட்டிய மகாவலி பிரதேசத்தில், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக சுமார் 5,000 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிக் குடும்பங்களின் விவசாய உற்பத்திகளுக்கும் காட்டு யானைகள், பெரும் தீங்கு விளைவித்துள்ளன என்றுச் சுட்டிக்காட்டப்படுகிறது.  

காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி நால்வர் பலியாகியுள்ளனர் என்று, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதரமாகக் கொண்டு தாம் வாழ்ந்து வருவதாகவும் எனினும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X