Janu / 2024 மார்ச் 04 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று 7 நாட்களாக காணாமல் போயிருந்த 79 வயதுடைய பெண் இரத்தினபுரி - எரட்ன வீதியிலிருந்து திங்கட்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மல்சிறிபுர மதஹபொலவைச் சேர்ந்த 79 வயதான ஜி. மெகோ நோனா, என்ற பெண் தனது குடும்பத்தாருடன் கடந்த 23 ஆம் திகதி சிவனடி பாத மலை தரிசனம் செய்ய சென்றுள்ளார் .
அதன்போது , குறித்த பெண் கூட்டத்திலிருந்து காணாமல் போயுள்ளதுடன் உறவினர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் .
இந் நிலையில் எரட்ண வீதியில் குறித்த பெண் இருப்பதாக எரட்ண விகாரை பிக்கு ஒருவர் ஊர் மக்களுக்கு அறிவித்துள்ளதையடுத்து தற்போது அவரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
செ.தி.பெருமாள்

8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025