Janu / 2024 ஜூன் 30 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக காமன் கூத்துக் கலைஞர் குறிஞ்சிக்கலைஞன் என அழைக்கப்படும் புசல்லாவை டெல்டா தோட்ட P.M.பாலகிருஷ்ணன் மலையக கலை கலாசார சங்கத்தினால் ( இரத்தின தீபம் ) கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
மலையக கலை கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் " மூத்த ஊடகவியலாளர் கலைஞர் மேடை நாடக தயாரிப்பாளர் அமரர் க . ப . சிவம் மற்றும் சிங்களம் , தமிழ் , கன்னடம் , மலையாள திரைப்பட நடிகை ஆச்சி மனோரமா ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், ஆன்றோர் கௌரவிப்பு நிகழ்வும் விருதுகள் வழங்கலும் மலையக கலை கலாசார சங்கம் ( இரத்தின தீபம் ) அமைப்பின் " தலைவர் S . பரமேஸ்வரன் தலைமையில் கண்டி டீ . எஸ்.சேனாநாயக வீதி செல்லத்துரை நினைவு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றபோது காமன்கூத்துக்கலையை களத்திலே கடந்த 25 வருட காலமாய் அரங்கேற்றிவரும் பொன் பாலகிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டார்.
காமன் கலையில் உயிர் நாடியாகத் திகழும் காமன் கூத்துப் பாடல்கள் தற்போது மறக்கப்பட்டு வருவதனால் காமன் கலையை தோட்டப்பறங்களில் முன்னெடுத்து வரும் பலர் பாடல்களுக்கு பஞ்சம் ஏற்படவே ஒரு சில முதலடிகளோடு பிந்தி வரும் பாடல்கள் தானானே,லாலாலா என்றவாறு பாடி வருகின்றனர்.
மேலும் காமன் கூத்துக் கலையில் பிரதான அங்கமாக வரும் பாத்திரங்கள் பல மாற்றம் செய்யப்பட்டு புதிய பாத்திரங்களும் (வேடங்கள் அல்லது வேசங்கள்) களமேற்றப்பட்டு வருகின்றன.இக்குறைகளைக் கண்கூடாகக் கண்ட, கண்டி புப்புரஸ்ஸ டெல்டா வடக்குத் தோட்டத்தில் 1993 ஆம் ஆண்டு காமன் கூத்துக்கலையை ஆரம்பித்து இன்றும் அரங்கேற்றிவரும் முருகேசு என்று அழைக்கப்படும் பாலாய்,பொன்னம்பலம் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வனான திரு.P.M.பாலகிருஷ்ணன் காமன் கூத்தில் இடம்பெறும் காப்பு கட்டுதல் முதலான ஆரம்பம் தொட்டு இரதிக்கு மீண்டும் உயிர்கொடுப்பது வரையான பாடல்கள் 100 ஐ ஒழுங்குற தொகுத்து சிறு சிறு மாற்றங்களோடு காத்திரமான படைப்பாகத் தந்துள்ளார்.
வரலாறு பேசும் "இரதி மதன் நவரத்தின பாடல்களின் தொகுப்பு 100"என்ற நூலை மலையகத்துக்காய் படைத்த அவருக்கு மலையக கலை கலாசார சங்கம் ( இரத்தின தீபம் ) கௌரவம் வழங்கி அவரது பணிக்கு உரம் சேர்த்துள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வீரகேசரி பத்திரிகையின் உதவி செய்தி ஆசிரியரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான ஜே. ஜி . ஸ்டீபன் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகள் ஊடகவியலாளரும் உத்தியோகப்பற்ற பதில் நீதிவானுமாகிய மொஹமட் வைஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். " இரத்தின தீபம் " ஸ்தாபகர் இராஜா ஜென்கின்ஸ் பிரதம அமைப்பாளர் மரியசாமி சத்தியவேல் ஆகியோர் நிகழ்வை சிறப்பித்த சகலருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
"வாழ்க நும் பணிகள் வளர்க நம் கலைகள்" "கலை அதன் விலை பொருள் மதிப்பில்லை" கலைத்திலகம் மருதமுத்து நவநீதன்J.P ( M.Ed) செயலாளர்
மலையக நட்சத்திரக் கலைப் பேரவை
மெய்யன்



2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago