2024 ஜூன் 10, திங்கட்கிழமை

காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

Mayu   / 2024 மே 08 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட வனராஜா தோட்ட பகுதியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலம் புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுத்தைகளுக்கு மோதல் ஏற்பட்டிருப்பதால்  இந்த சிறுத்தை உடலில் காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதேசவாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து குறித்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X