Janu / 2025 ஜூலை 15 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனையில் இருந்து ஒக்கம்பிட்டிய நோக்கி வியானி கால்வாய்க்கு இணையாக உள்ள வீதியில் பயணித்த கார், செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை மபாகட 17வது கட்டை பகுதியில் வைத்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவரும் உயிரிழந்ததாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தற்போது மஹியங்கனை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலித ஆரியவங்ச

9 minute ago
21 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
53 minute ago