Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
ஹட்டன், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நிலவி வரும் தாதியர் குறைபாடு உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, இராஜங்க கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வைத்தியசாலையில், சகல வசதிகள் காணப்பட்டாலும் தாதியர் பற்றாக்குறைக் காரணமாக, வைத்தியசாலையின் அதித்தீவிர சிகிச்சைப் பிரிவு இயங்காமலேயே உள்ளது.
ஒரேநேரத்தில், 10 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வகையில், கட்டில் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதித்தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளப் போதிலும், தாதியர் பற்றாக்குறைக் காரணமாக, இப்பிரிவு இயங்காமல் உள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வைத்தியசாலையிலுள்ள அனைத்துப் பிரிவுகளும் முறையாக இயங்க வேண்டுமானால், 104 தாதியர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால், தற்போது 60 தாதியர்கள் மட்டுமே, கடமையில் உள்ளதாகவும், வைத்தியசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், சத்திரகிசிச்சை பிரிவுக்கு 12 பேர்¸ அதித்தீவிர சிகிச்சை பிரிவுக்கு 8 பேர், குழந்தைபேறு பிரிவுக்கு 06¸ அவசர சிகிச்சை பிரிவுக்கு 04 பேர், கண் சிகிச்சை பிரிவுக்கு 8 பேர், ஏனைய சிகிச்சை பிரிவுகளுக்கு 6 பேர் அடங்களாக, 44 தாதியர்கள் தேவைப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.
இது தொடர்பில், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.விஜேதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் சென்ற நிலையில், அவர் இப்பிரச்சினையை, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், டிக்கோயா வைத்தியசாலையில் பாரிய பாடாகவுள்ள தாதியர் பற்றாக்குறைக்கு> விரைவில் தீர்வு காண்பதாகவும், 44 தாதியர்கள் இந்த வைத்தியசாலைக்கு நியமிக்கப்படுவார்கள் என்றும், சுகாதார பிரதி அமைச்சர் உறுதிமொழி வழங்கியதாக, கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், வைத்தியசாலைகளை நிலைமைகளை நேரடியாகக் கேட்றிந்துகொண்டார்.
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago