R.Maheshwary / 2021 நவம்பர் 01 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.பாலேந்திரன்
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ், பிரஜாசக்தி நிறுவனத்தோடு இணைந்ததாக செயற்படும் கிளாஸ்கோ உடற்பயிற்சி நிலையமானது, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக நவீனமயப்படுத்தப்பட்டவுள்ளது.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில், மலையக இளைஞர்களின் நலன் கருதி பெருந்தோட்ட பகுதிகளில் பிரஜாசக்தி நிலையங்களோடு இணைந்ததாக பல உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கபட்டன.
இவ்வாறு அமைக்கபட்ட உடற்பயிற்சி நிலையங்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் இயங்காமலும், பயன்படுத்தமுடியாத நிலையிலும் காணப்பட்டன.
அவ்வாறு மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட கிளாஸ்கோ உடற்பயிற்சி நிலையம் தொடர்பாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில், நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, விரைவாக முழுமையாக உடற்பயிற்சி நிலையத்தை புனரமைத்து, நவீனமயப்படுத்தபட்ட உடற்பயிற்சி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago