2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

குடிநீரில் மசகு எண்ணெய்; மக்கள் கடும் எதிர்ப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 03 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

எரிபொருள் நிறப்பு நிலையத்திலிருந்து வெளியேரும் எண்ணெய்க் கசிவால், குடிநீர் மாசடைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், நேற்று (03) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  

கொழும்பு-ஹட்டன் பிரதான வீதியின், குயில்வதைப் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிறப்பு நிலையத்துக்கருகில், காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

குறித்த எரிபொருள் நிறப்பு நிலையத்துக்குக் கீழ் பகுதியில் வசிக்கும் சுமார் 25 குடும்பங்களுக்கு, சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் கசியும் எண்ணை நீரில் கலப்பதால் பாதிப்டைந்துள்ளதாக, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.  

இப்பிரச்சினை தொடர்பில், வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததையடுத்து, முறைபாடு குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தையடுத்து, ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .