2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

குப்பைகளால் சந்திரக்காவெவவுக்கு மாசு

Kogilavani   / 2021 மார்ச் 04 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிப்பிட்டி சந்திரிக்காவெவவுக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால், பாரிய சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஆற்றுநீரை பல்வேறுத் தேவைக்களுக்காக, பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், வாவிக்கு அருகில் பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன்கள், இரும்புப் பொருட்கள், விலங்குகளின் கழிவுகள் உள்ளிட்டவைக் கொட்டப்படுகின்ற என்றும் இந்தக் கழிவுகள் ஆற்றுநீரில் கலப்பதுடன், துர்நாற்றமும் வீசுவதால் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்பகுதிகளில், குப்பைகளைக் கொட்டுவதை நிறுத்துமாறும் இல்லையெனில் எதிர்வரும் வாரங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X