Editorial / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இந்த வருட பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இணைந்து கொண்டார்.
கட்சியின் பதுளை மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் நடவடிக்கைகளில் இணைந்து கொண்ட அவர், பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் மைக் சின்னத்தில் போட்டியிடும் அணியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
பெருந்தோட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன் வடிவேல் சுரேஷ் ஹலிஎல்ல தோட்டத்தில் தனது கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து இந்து முறைப்படி பூஜையில் கலந்து கொண்டு, கும்ப நீரில் நீராடினார்.
12 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
56 minute ago
1 hours ago